காவல்துறை பணியால் பகைதான் மிஞ்சியது - பணீநீக்கம் பெற்ற இஸ்பெக்டரின் வீடியோ வைரல்

பல முக்கிய புள்ளிகளுடன் தொடர்பில் இருந்து பாலியல் தொழில் புரோக்கராக செயல்பட்டு வந்த ஒருவரை கைது செய்துள்ளேன் என திலீபன் கூறியுள்ளார்.

காவல்துறை பணியால் பகைதான் மிஞ்சியது
Published on: 

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் சொத்தவிளையை சேர்ந்தவர் திலீபன். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர், எவ்வித முன் அனுமதியோ, தகவலோ இன்றி 555 நாட்கள் பணிக்கு வராமல் இருந்ததாக புகாரின் பேரில் பணியில் இருந்து விடுவிக்கப் பட்டார்.

இந்தநிலையில் திலீபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “27 விபசார வழக்குகளில் தொடர்பு டைய ஒருவர் எனது வீட்டு வாசலுக்கு ஆட்டோவில் வந்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றுள்ளார்.

நான் சிறப்பு பிரிவில் இருந்த போது பல முக்கிய புள்ளிகளுடன் தொடர்பில் இருந்து பாலியல் தொழில் புரோக்கராக செயல்பட்டு வந்த ஒருவரை கைது செய்துள்ளேன். காவல்துறையில் நான் எவ்வளவு பகையை சம்பாதித்து வைத்துள்ளேன் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசுகிறார். இந்த வீடியோ வைரல் ஆனது.

X