

சென்னை,
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 28 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. 17-வது தமிழக சட்டமன்றத்தின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று நடந்து முடிந்துள்ளன. தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழக கவர்னர் அர்லேகரை சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் இன்று சந்தித்து பேசினார். கவர்னர் உரையுடன் தமிழக சட்டப்பரவை கூட்டத்தொடர் தொடங்கி, அதன் பிறகு பட்ஜெட் கூட்டத்தொடரும் நடந்து முடிந்த நிலையில், மரியாதை நிமித்தமாக கவர்னர் அர்லேகரை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது தமிழக சட்டமன்றத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைந்தது என்பது குறித்தும், ஜனநாயக செயல்முறைகள் குறித்தும் இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.