பெங்களூரு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 2-வது நாளாக வினாடிக்கு 33 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 2-வது நாளாக வினாடிக்கு 33 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

மைசூரு:

தொடர் கனமழை

கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே அணை நிரம்பிவிட்ட நிலையில் நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 124.33 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரத்து 148 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 28 ஆயிரத்து 290 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணையும் நிரம்பி உள்ளது.

தமிழகத்துக்கு...கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,283.63 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 675 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு கபிலா ஆற்றில் 4 ஆயிரத்து 792 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இவ்விரு அணைகளில் இருந்தும் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 32 ஆயிரத்து 965 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்