சினிமா செய்திகள்

அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள 'போர் தொழில்' படத்தின் டிரைலர் வெளியீடு

'போர் தொழில்' திரைப்படம் வருகிற ஜுன் 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

'தெகிடி', 'ஓ மை கடவுளே' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 'போர் தொழில்' திரைப்படம் வருகிற ஜுன் 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

One of the best scripts I've read and a film I'm really excited about.
Por Thozhil Trailer out now!
https://t.co/ha4qTFQffr

June 9th see you in theatres! #PorThozhil @ApplauseSocial @e4echennai @vigneshraja89@realsarathkumar @nikhilavimal1 @SakthiFilmFctry pic.twitter.com/TtBxA2d7Fi

Ashok Selvan (@AshokSelvan) May 30, 2023 ">Also Read:

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்