டைரக்டர் வினோ வெங்கடேஷ் கூறியதாவது:-
இது, ஒரு பேய் படம்தான். ஆனால் பேய் படங்களுக்கு இங்கே போடப்பட்டுள்ள ஹைதர் காலத்து பார்முலாவில் இருந்து விலகி, அனைத்து அம்சங்களும் கலந்து ஒரு விறுவிறுப்பான படமாக தயாராகி இருக்கிறது. ராய் லட்சுமி ஒரு கவர்ச்சி நடிகை என்ற இமேஜை உடைக்கும்.
அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவருக்கு உரிய இடத்தை சிண்ட்ரெல்லா பெற்று தரும். இதில் சாக்ஷி அகர்வால், வில்லியாக நடித்துள்ளார். வழக்கமான திகில் படங்களில் இருந்து விலகி, புதிய பாதையில் கதை பயணிக்கும். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகி இருக்கிறது.