சினிமா செய்திகள்

"டிடி நெக்ஸ்ட் லெவல்" - நிழல்கள் ரவியின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு

சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் வருகின்ற 16ம் தேதி திரைக்கு வர உள்ளது.

சென்னை,

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். இவர் தற்போது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார்.

இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 16-ம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் படத்தில் நடித்த நடிகர்களின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நடிகர் நிழல்கள் ரவியின் கதாபாத்திர போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் நிழல்கள் ரவி 'ஆட்டோ பாஸ்கர் & மெக்டொனால்ட்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மராட்டிய துணை முதல் மந்திரியாக அஜித் பவார் மனைவி பதவியேற்பு

மத்திய பட்ஜெட்; முக்கிய சலுகைகள் அறிவிக்கப்படுமா?

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது

லஞ்சம் வாங்கும்போது கைது... குழந்தை போல் அலறி ஆர்ப்பாட்டம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

காஷ்மீர் என்கவுன்ட்டர்: பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்