சினிமா செய்திகள்

தெலுங்கு படங்களில் தனுஷ்

தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘சார்' என்ற தெலுங்கு படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

தினத்தந்தி

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தனுஷ் ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய இந்தி படங்களில் நடித்து வட இந்தியாவிலும் பிரபலமானார். 'தி கிரேமேன்' மூலம் ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். ஆந்திரா, தெலுங்கானாவிலும் தனுஷ் படங்கள் வசூல் குவிக்கின்றன. தெலுங்கு நடிகர்களுக்கு இணையாக அவருக்கு அங்கு ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். இதனால் தமிழில் வெளியாகும் தனுஷ் படங்களை தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தனுசை நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'சார்' என்ற தெலுங்கு படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தை வாத்தி என்ற பெயரில் தமிழிலும் வெளியிட உள்ளனர். தொடர்ந்து தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். விஜய்யை வைத்து வாரிசு படத்தை தயாரித்துள்ள பிரபல தெலுங்கு பட அதிபர் தில்ராஜுவும் தனுஷ் நடிக்கும் தெலுங்கு படமொன்றை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் கிஷோர் ரெட்டி டைரக்டு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்