சினிமா செய்திகள்

தீபாவளிக்கு விஜய், தனுஷ் படங்கள் மோதல்

தீபாவளிக்கு எந்தெந்த படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய்யின் பிகில் தீபாவளிக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்தனர்.

இப்போது தனுஷ் நடிக்கும் பட்டாசு படத்தையும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். 2 பெரிய படங்கள் வருவதால் பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.

பிகில் படத்தில் விஜய் தந்தை, மகன் என்று இரு வேடங்களில் வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். அட்லி இயக்குகிறார். மகன் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். சென்னையில் கால்பந்து மைதானத்தை அதிக செலவில் அரங்காக அமைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளனர்.

இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் சிங்கப்பெண்ணே என்ற பாடலை பாடி உள்ளார். இந்த பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களை உயர்வாக சித்தரிக்கும் வரிகள் பாடலில் உள்ளதாகவும் பாராட்டுகள் குவிந்தது. படத்தில் விஜய்யும் சொந்த குரலில் ஒரு பாடலை பாடி உள்ளார். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த படத்துக்கு இப்போது பட்டாசு என்ற பெயர் வைத்து முதல் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர். படவேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் மெஹ்ரின் பிரசிதா, சினேகா, ஆகியோரும் நடிக்கின்றனர். பட்டாசு படத்தில் தனுசுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்துள்ளனர். அதிரடி படமாக தயாராகி உள்ளது.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்