சினிமா செய்திகள்

'உன் நினைவால் உனை எழுத முயன்றேன்' - இணையத்தில் வைரலாகும் 'மார்கழி திங்கள்' படத்தின் முதல் பாடல்

'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் இயக்குனர் சுசீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

பள்ளி பருவத்து காதலை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. 'உன் நினைவால்' என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இளையராஜா எழுதியுள்ள இந்த பாடலை அனன்யா பட் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'மார்கழி திங்கள்' படம் வருகிற அக்டோபர் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்