சினிமா செய்திகள்

பாலியல் தொல்லைகள் பற்றி ரகுல் பிரீத் சிங்

கவர்ச்சிக்கு மாறுவது என் எண்ணம் இல்லை.

தினத்தந்தி

நான் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. பக்கத்து வீட்டு பெண்மாதிரி இருக்கும் நீங்கள் இப்படியெல்லாம் செய்யலாமா? என்று கேட்கிறார்கள். கவர்ச்சிக்கு மாறுவது என் எண்ணம் இல்லை. நிறைய பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடித்து இருக்கிறேன். கவர்ச்சி தவறானது அல்ல.

நிறமும், நல்ல உடல் அமைப்பும் இருந்தால் கவர்ச்சியாக இருக்கலாம். எந்த நடிகையானாலும் கவர்ச்சியாக போஸ் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள்.

சினிமா வாய்ப்பு தேடும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலைமை இருப்பதாக பேசப்படுகிறது. சினிமாவில் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது. ஆனால் அது வெளியே வராது.

உனக்கு அதுமாதிரி ஏதேனும் அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதா? என்று கேட்கிறார்கள். நான் நிறைய படங்களில் நடித்து விட்டேன். இதுவரை அப்படி எதுவும் நடந்தது இல்லை. சினிமா வாய்ப்புக்காக யாரையும் கவர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அழகி போட்டியில் பங்கேற்றேன். ஆனால் வெற்றிபெறவில்லை. அந்த போட்டி நடந்து 7 ஆண்டு ஆகிவிட்டது. ஆனாலும் அப்போது நடந்த அழகி போட்டி என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. நடிகையாகி விட்டேன். இப்போது அழகி போட்டிக்கு என்னை நடுவராக அழைக்கிறார்கள். வெற்றி, தோல்விகள் வாழ்க்கையில் ஒரு பகுதிதான். இந்த அனுபவங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள தைரியத்தை கொடுக்கும். இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்