சினிமா செய்திகள்

டோனியின் 'அதர்வா: தி ஆரிஜின்' புத்தகத்தை வெளியிட்டார் ரஜினிகாந்த்..!

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். டோனியின் 'அதர்வா: தி ஆரிஜின்' புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

புதுடெல்லி,

காமிக் பிரியர்களுக்கும், கிரிக்கெட் வீரர் எம்.எஸ். டோனி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் வகையில், மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோ தயாரித்துள்ள மெகா பட்ஜெட் கிராபிக் நாவல் 'அதர்வா: தி ஆரிஜின்'. இந்த நாவலை ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதியுள்ளார். இந்த நாவலில் வரும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு எம்.எஸ்.டோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த கிராபிக் நாவலின் மோஷன் போஸ்டரை டோனி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். வரலாற்றுக் கதையை பின்னணியாக கொண்ட இந்த நாவலுக்காக 150 ஓவியங்கள் வரையப்பட்டது. இந்த கிராபிக் நாவலில் டோனியின் தோற்றம் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் டோனியின் 'அதர்வா: தி ஆர்ஜின் கிராபிக் நாவல் புத்தகத்தின் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டார். இந்த நாவலுக்கான டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த டிரைலர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக டோனி கூறுகையில், 'அதர்வா: தி ஆரிஜின் என்ற இந்த புதிய முயற்சியில் நானும் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது திறமையான மற்றும் ஆர்வமுள்ள குழுவால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சுவாரசியமான படைப்பாகும். ரஜினி சார் இந்த குழுவின் பணியை அங்கீகரித்து பாராட்டியுள்ளார். அவர் இந்த நாவலின் முதல் பிரதியை வெளியிட்டதில் மிகவும் மகிழச்சியடைகிறேன்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்