சினிமா செய்திகள்

நடிப்பை தொழிலாக செய்யும் ராஷ்மிகா

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

தினத்தந்தி

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

என்னை பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள ஆர்வப்படும் விஷயங்களை நான் பேச தயங்குவது இல்லை. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கிறேன். 3 மொழிகளிலும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. எங்கு போனாலும் சொந்த மொழி மாதிரிதான் தோன்றுகிறது.

சினிமா துறையில் நடிப்பு என்பது எங்கு போனாலும் ஒன்றுதான். மொழியை புரிந்து கொள்ள வெண்டும். அவ்வளவுதான். நான் நடிப்பை ஒரு தொழிலாக செய்கிறேன். நடிகையான பிறகுதான் வாழ்க்கை என்றால் என்ன என்று எனக்கு புரிய ஆரம்பித்தது.

புதிய மொழிகளை சாதாரணமாக எல்லோரும் கற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் மூன்று, நான்கு மொழிகள் தெரிந்து இருக்கிறது. சினிமாவை தொழிலாக செய்பவர்களுக்கு மொழியை கற்றுக்கொள்வது பெரிய விஷயம் இல்லை.

பள்ளியில் பசங்க 3 மொழிகள் கற்றுக்கொள்கிறார்கள். அப்படி இருக்க எனக்கு மொழி கஷ்டம் இல்லை. புதிய மொழிகளை தொழில் ரீதியாக கற்றுக்கொள்கிறேன். எந்த மொழியில் வாய்ப்பு வருகிறதோ அந்த மொழியை கற்றுக்கொள்ள கவனம் செலுத்துகிறேன்.

இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்