சினிமா செய்திகள்

தனது நடிப்பை விமர்சிக்கும் சூர்யா

நான் 20 வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருக்கிறேன். ஆனாலும் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் இருக்கிறது.

தினத்தந்தி

நான் 20 வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருக்கிறேன். ஆனாலும் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் இருக்கிறது. சில நேரம் எனது படங்களை பார்ப்பது இல்லை. திரைக்கு வந்த பிறகு 100 நாட்கள் காத்திருந்து பார்த்த படங்களும் உண்டு. நான் நடித்த சில குறிப்பிட்ட காட்சிகளை பார்க்காமல் தவிர்த்தும் இருக்கிறேன். ஆனாலும் படத்தில் நான் செய்துள்ள தவறை மக்கள் பொறுத்து மன்னித்து ரசிப்பார்கள் என்று நினைப்பது உண்டு. எனது மனைவி நடிகையாக இருக்கிறார். சகோதரரும் நடிக்கிறார். அவர்களுக்கு தன்னம்பிக்கை உண்டு. அவர்கள் நடித்த காட்சியை விரும்புவார்கள். ஆனால் நான் அப்படி இல்லை எனது நடிப்பை கடுமையாக விமர்சனம் செய்வேன். சரியாக நடிக்கவில்லை. இன்னும் சிறப்பாக நடித்து இருக்கலாம் என்று கூறிக்கொள்வேன். சினிமாவுக்கு வந்து 20 வருடங்களுக்கு மேலான பிறகும் இன்னும் நான் சிறப்பாக நடித்து இருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.''

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்