சினிமா செய்திகள்

படங்கள் தோற்றால் ஒதுக்குகிறார்கள் - நடிகை ரகுல் பிரீத் சிங்

படங்கள் தோற்றால் ஒதுக்குகிறார்கள் என நடிகை ரகுல் பிரீத் சிங் கூறினார்.

தினத்தந்தி


ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமாக உள்ளார். இந்தியிலும் நடித்துள்ளார். அவருக்கு திருப்பு முனை படமாக எதுவும் அமையவில்லை. இதனால் முன்னணி கதாநாயகிகள் இடத்தை பிடிக்க முடியாமல் இருக்கிறார் என்கின்றனர் தெலுங்கு பட உலகினர். பட வாய்ப்புகளும் குறைந்துள்ளது.

இதுகுறித்து ரகுல் பிரீத் சிங் கூறியதாவது:-

சினிமாவில் வெற்றி கொடுப்பது முக்கியம். தோல்வி படங்களில் நடித்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். நான் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த மாதிரி ஓடவில்லை. சினிமாவில் வெற்றி-தோல்விகள் யார் கையிலும் இல்லை. ஒவ்வொரு படத்தையும் கஷ்டப்பட்டு எடுக்கிறோம். ஆனாலும் சில படங்கள் தோல்வி அடைகின்றன. சில படங்கள் வெற்றி பெறுகின்றன.

ஆனால் வெற்றி தோல்விக்கான காரணம் யாருக்கும் தெரிவது இல்லை. இதற்காக சினிமாவில் உழைத்தவர்கள் யாரையும் குறை சொல்ல முடியாது. யாரும் தோல்வி படம் எடுக்க நினைப்பது இல்லை. நன்றாக ஓடும் என்று எதிர்பார்க்கிற படங்கள் தோல்வி அடைவதும், ஓடாது என்று நினைக்கிற படங்கள் வெற்றி பெறுவதும் இங்கு நடக்கின்றன.

வெற்றி-தோல்வியை ரசிகர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்கள் எப்படிப்பட்ட படங்களை விரும்புகிறார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது. நான் தோல்வி படம் கொடுத்த இயக்குனர்களை ஒதுக்குவது இல்லை. இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்