புதுச்சேரி

குடிசை வீட்டில் தீ விபத்து

மணப்பட்டு பேட் கிராமத்தில் கூலித்தொழிலாளி வீட்டில் தீப்பிடித்து எரிந்தது.

தினத்தந்தி

பாகூர்

பாகூர் தொகுதி மணப்பட்டு பேட், புதுதெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி. கூலித் தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இன்று மாலை அவரது குடிசை வீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே வீட்டில் இருந்த வேலுச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வீடு முழுவதும் பற்றி எரிந்தது.

தகவல் அறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதற்குள் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், துணி மணிகள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என்று கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த பாகூர் எம்.எல்.எ. செந்தில்குமார் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்