சினிமா துளிகள்

30 வருடங்களுக்குப்பின் பாக்யராஜ் -ஐஸ்வர்யா

நடிகர் கவின் நடிக்கும் புதிய படத்தில் 30 வருடங்களுக்குப் பிறகு நடிகர் பாக்யராஜும் நடிகை ஐஸ்வர்யாவும் இணைந்துள்ளனர்.

தினத்தந்தி

கவின்-அபர்ணாதாஸ் ஜோடியுடன் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் தயாராகும் புதிய படத்துக்கு 'டாடா' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.


''இது ஒரு அழகான காதல் கதை'' என்கிறார், டைரக்டர் கணேஷ் கே.பாபு. இவர் மேலும் சொல்கிறார்:-

''அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானது என்பதால் படத்துக்கு 'டாடா' என்ற பெயரை வைத்தோம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த வார்த்தையை குறிப்பிட்டு இருப்பார்கள். அல்லது கேட்டு இருப்பார்கள். படத்தில், இந்த தலைப்புக்கு நிறைய முக்கியத்துவம் உள்ளது. கதைக்கு பொருத்தமாகவும் இருக்கும்.

முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிவடைந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெற இருக்கிறது. கவின்-அபர்ணாதாசுடன் கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். கடைசியாக இரண்டு பேரும் 'ராசுக்குட்டி' என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். 30 வருடங்களுக்குப்பின், 'டாடா' படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்