மாவட்ட செய்திகள்

சிறுகனூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 13 பேர் படுகாயம்

சிறுகனூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நரசிங்க மங்கலத்தை சேர்ந்தவர் இளஞ்சியம் (வயது 60). இவரும் அதே பகுதியை சேர்ந்த 11 பேரும் நேற்று எதுமலையில் உள்ள கருப்பு கோவிலில் சாமி கும்பிடுவதற்காக திட்டமிட்டு ஒரு சரக்கு ஆட்டோவில் சென்றனர்.

ஆட்டோவை அப்பகுதியை சேர்ந்த கருப்பண்ணனின் மகன் ராமு (30) ஓட்டினார். அங்கு சாமி கும்பிட்ட பின்பு, அவர்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். பாலையூர் பஸ் நிறுத்தம் அருகே சரக்கு ஆட்டோ வந்த போது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

13 பேர் படுகாயம்

இதில் ஆட்டோ டிரைவர் ராமு, ஆட்டோவில் பயணம் செய்த இளஞ்சியம், அதே பகுதியை சேர்ந்த வடிவேலின் மனைவி தனலட்சுமி (39), அவரது மகள்கள் சுவேதா (18), அபிநயா (13), காவியா (11), மகன் விஷால், மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுகந்தி (23), மஞ்சுளா (40), தமிழ்வேணி, வடிவுக்கரசி (19), மாரியப்பன் (24), கிருஷ்ணமூர்த்தி ஆகிய 13 பேர் படுகாயம் அடைந்தனர். அந்தவழியாக வந்தவர்கள் இவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில், சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மதன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்