மாவட்ட செய்திகள்

குண்டர் சட்டத்தில் 2 ரவுடிகள் சிறையில் அடைப்பு

குண்டர் சட்டத்தில் 2 ரவுடிகளை போலீசார் சிறையில் அடைத்தனர்.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமம் கீழண்டை தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 27). காஞ்சீபுரத்தை அடுத்த வேலியூர் ஊவேரிசத்திரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மதிவாணன் என்கிற விக்கி (24). இவர்கள் அடிக்கடி கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதையொட்டி பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தார். அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரிக்கு சிபாரிசு செய்தார். அவர் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து ரவுடிகளான தட்சிணாமூர்த்தி, மதிவாணன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவு நகல் காஞ்சீபுரம் கிளை சிறை அதிகாரியிடம் காண்பிக்கப்பட்டு அதன் பின்னர் ரவுடிகள் போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்