மாவட்ட செய்திகள்

கோடியக்காட்டில் கார் கவிழ்ந்து 7 பேர் படுகாயம்

கோடியக்காட்டில் கார் கவிழ்ந்து 7 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

வேதாரண்யம்,

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முரளி (வயது23), சுரேஷ் (19), ராஜ்மோகன் (19), ஞானசேகரன் (47), வெங்கடேஷ் (23), அர்ச்சுணன் (44), மணிகண்டன் (22) ஆகியோர் ஒரு காரில் வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை சுந்தர் என்பவர் ஓட்டி சென்றார். கோடியக்காடு முனியன் கோவில் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கார் கவிழ்ந்தது.

7 பேர் படுகாயம்

இதில் காரில் சென்ற 7 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தஞ்சை மற்றும் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுபாஷ்சந்திரபோஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், தமிழரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்