கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள பெரியதள்ளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 31). கூலித்தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி விஜயகாந்த் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, திருமணம் செய்ய மறுத்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விஜயகாந்தை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி விஜயகாந்திற்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.