மாவட்ட செய்திகள்

நடிகர் சுஷாந்த் சிங் பிணமாக மீட்கப்பட்ட வீட்டில் சி.பி.ஐ. மீண்டும் ஆய்வு

சுஷாந்த் சிங் பிணமாக மீட்கப்பட்ட வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர்.

தினத்தந்தி

மும்பை,

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக கடந்த 2 வாரமாக சி.பி.ஐ. அதிகாரிகள் மும்பை பாந்திரா சாந்தாகுருசில் உள்ள டி.ஆர்.டி.ஒ. விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர், நடிகரின் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே அவர்கள் சுஷாந்த் சிங்கின் பாந்திரா வீட்டில் 2 நாட்கள் தடவியல் நிபுணர்களுடன் ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் சுஷாந்த் சிங் பிணமாக மீட்கப்பட்ட வீட்டில் ஆய்வு செய்தனர். அவர்கள் நடிகர் பிணமாக மீட்கப்பட்ட போது அவருடன் வீட்டில் இருந்த நண்பர் சித்தார்த் பிதானி, சமையல்காரர் நீரஜ், வேலைக்காரர் கேசவ் ஆகியோரையும் அங்கு அழைத்து சென்று இருந்தனர்.

அப்போது அவர்கள் சுஷாந்த் சிங் பிணமாக மீட்கப்பட்ட போது நடந்த காட்சியை 3 பேரையும் நடித்து காட்ட சொன்னனர். மேலும் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றும் பார்த்தனர். பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு இருந்து டி.ஆர்.டி.ஒ. விருந்தினர் மாளிகைக்கு திரும்பினர்.

இந்தநிலையில் மும்பை போலீசார் சுஷாந்த் சிங் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ.க்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்