வி.கைகாட்டி,
கூட்டத்திற்கு அரியலூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர் தங்க.பச்சமுத்து வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைசெயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். அரியலூர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
இதில் மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட அவை தலைவர் கணேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விளாங்குடி கிளை செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.