பொன்னேரி,
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், பொன்னேரி எம்.எல்.ஏ.வுமான சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார். மாவட்ட அ.தி.மு.க. அவைதலைவர் தீபகண்ணன், இணைசெயலாளர் விஜயலட்சுமி ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் மோகனவடிவேல், கார்மேகம், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, மாவட்ட இளைஞர்அணி செயலாளர் பானுபிரசாத் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இந்த கூட்டத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் பாண்டியராஜன், எம்.எல்.ஏ.க்கள் நரசிம்மன், விஜயகுமார், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.