மாவட்ட செய்திகள்

அறந்தாங்கியில் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு ஜன்னல் கம்பியை வளைத்து மர்ம நபர்கள் கைவரிசை

அறந்தாங்கியில், ஜன்னல் கம்பியை வளைத்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 10 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.

தினத்தந்தி

அறந்தாங்கி.

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 40). இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலா. 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு எட்டியதளியில் உள்ள தாயார் வீட்டிற்கு, தனது மகள்களை அழைத்து கொண்டு கலா சென்றிருந்தார்.

பின்னர் அங்கிருந்து நேற்று காலை அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் உள்ள ஜன்னல் கம்பிகள் வளைந்து கிடந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கலா, உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து, அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு கலா தகவல் தெரிவித்தார். அதன்பேரில், அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் புதுக்கோட்டையில் இருந்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கை ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்