மாவட்ட செய்திகள்

திருவிழாவில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது

குருநாதசாமி கோவில் திருவிழாவில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர்,

அந்தியூர் புதுப்பாளையத்தில் பிரசித்திபெற்ற குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி குதிரைச்சந்தை நடந்து வருகிறது. விழாவில் கலந்துகொள்ள தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக மாநிலங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

கோவில் திருவிழாவையொட்டி அந்தியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் மதுபோதையில் வாலிபர்கள் 4 பேர் தகராறில் ஈடுபட்டனர். இதனை கவனித்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினார்கள். மீண்டும் அதே வாலிபர்கள் நேற்று குருநாதசாமி கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் கோவிலுக்கு வந்த பெண் பக்தர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். இதுகுறித்து பெண்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் கூறினார்கள். போலீசார் அந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தினேஷ் (வயது 26), கபிலன் (29), சுமன் (23), பிரபு (22) ஆகியோர் என்பதும், அவர்கள் 4 பேரும் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 வாலிபர்களையும் கைது செய்தனர்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்