மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இறால் வளர்ப்பு குறித்த பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் இறால் வளர்ப்பு குறித்த 3 நாள் பயிற்சி வகுப்பு நடந்தது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கடற்சார் உயிரின ஆராய்ச்சி பண்ணையில் வனாமி இறால் வளர்ப்பு குறித்த 3 நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 11 பயனாளிகள் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சியில் சர்வதேச அளவில் வனாமி இறால் உற்பத்தி நிலை, பினேயஸ் வனாமியின் உயிரியல், பண்ணைக்கான இடத்தேர்வு, இறால் குஞ்சு உற்பத்தி மற்றும் இருப்பு செய்யும் முறைகள், உணவு மேலாண்மை முறைகள், நீர்த்தர மேலாண்மை முறைகள், வனாமி இறால்களுக்கான நோய்கள், அறுவடை முறைகள் மற்றும் வனாமி இறால் உற்பத்திப் பொருளாதாரம் போன்ற பாடங்கள் நடத்தப்பட்டன. மேலும் பயிற்சியாளர்கள், வனாமி இறால் பண்ணைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

இந்த பயிற்சியின் நிறைவு விழாவில் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் (பொறுப்பு) விஜய் அமிர்தராஜ் வரவேற்றார். மீன்வளர்ப்பு துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆதித்தன் வாழ்த்துரை வழங்கினார். மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் சுகுமார் தலைமை தாங்கினார். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு கல்லூரி முதல்வர் சுகுமார் சான்றிதழ் வழங்கினார். மீன்வள விரிவாக்கத்துறை உதவி பேராசிரியர் அருள்ஒளி நன்றி கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்