மாவட்ட செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் 30 பேரை கடித்து குதறிய வெறி நாய்

தேன்கனிக்கோட்டையில் 30 பேரை கடித்து குதறிய வெறி நாயால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் பொதுமக்களை வெறி நாய்கள் கடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் மேல்கோட்டை, கோட்டைவாசல், கிசான் தெரு ஆகிய பகுதிகளில் நேற்று வெறி நாய் ஒன்று சுற்றி திரிந்தது. அந்த நாய் திடீரென்று அந்த பகுதிகளில் நடந்து சென்ற முதியவர்கள், மாணவர்கள், தொழிலாளிகள் என 30-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த நாயை விரட்ட முயன்றனர். ஆனால் அவர்களையும் வெறிநாய் கடிக்க முயன்றது. இதைத் தொடர்ந்து அந்த நாய் அங்கிருந்து ஓடிவிட்டது.

பொதுமக்கள் கோரிக்கை

நாய் கடித்ததில் அதே பகுதியை சேர்ந்த பாஷா என்பவரின் மகன் ஷெரிப் (வயது 16), செய்தானி(9), ஆனந்தன்(22), குலாப்பாய்(50), நவீன்(3), சின்னமரி(58), சஹானா(35) உள்பட 30 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. தேன்கனிக்கோட்டை பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. எனவே, வெறி நாய்களை பிடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்