மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் குறித்து வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

அடிப்படை வசதிகள் குறித்து வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

ஊட்டி,

குன்னூர் அருகே மேலூர் அரசு தொடக்கப்பள்ளி, தூதுர்மட்டம் அரசு நடுநிலைப்பள்ளி, சேலாஸ் லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி, வண்டிசோலை நடுநிலைப்பள்ளி, ஓட்டுப்பட்டரை சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, குன்னூர் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பது குறித்து தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனடியாக விடுபட்ட வசதிகளையும் ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

முன்னதாக ஊட்டி அருகே உள்ள கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு குறும்பட பிரசார வாகனத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

இதில் குன்னூர் தாசில்தார் தினேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜ், சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்