மும்பை,
காங்கிரஸ் கட்சி நாட்டின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தில் 48 ஆண்டுகளாக செய்யாத செயல்களை பா.ஜனதா வெறும் 48 மாதங்களில் செய்துகாட்டியுள்ளது. நாங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக கூறவில்லை. விவசாயத்துறை மற்றும் பெட்ரோல் விலை உயர்வு போன்ற விவகாரங்களில் நிறைய செய்து முடிக்க வேண்டி இருக்கிறது. ஆனால் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து பால்கர் தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா மற்றும் சிவசேனா மோதிக்கொண்டது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மந்திரி நிதின் கட்காரி, பா.ஜனதா மற்றும் சிவசேனா இடையேயான கூட்டணி மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே மற்றும் மறைந்த பா.ஜனதா தலைவர் பிரமோத் மகாஜன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இந்துத்வா கொள்கைகளை முன்னிறுத்தும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட இந்த கூட்டணியில் இரு கட்சிகளுக்கும் எந்தவித கொள்கை பேதமும் இல்லை. அடுத்து வரும் தேர்தல்களில் நான் இந்த கூட்டணி தொடர்வதையே விரும்புகிறேன் என தெரிவித்தார்.
இதையடுத்து பா.ஜனதா-சிவசேனா இடையேயான வேறுபாடுகளை சரி செய்வதற்கு முயற்சி செய்வீர்களா எனவும், மாநில அரசியலுக்கு திரும்ப வாய்ப்புள்ளதா எனவும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் கூறிய மந்திரி நிதின் கட்காரி, சிவசேனாவுடனான விவகாரத்தை கையாளுவதற்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பா.ஜனதா தலைவர் ராவ் சாகேப் தன்வே ஆகிய இருவருக்கும் போதிய திறமை உள்ளது என கூறினார். மேலும் மாநில அரசியலுக்கு திரும்ப விருப்பமில்லை எனவும் தெரிவித்தார்.