ராஜா 
மாவட்ட செய்திகள்

ரூ.15 லட்சம் நில அபகரிப்பு வழக்கில் தொழிலதிபர் கைது

ரூ.15 லட்சம் நில அபகரிப்பு வழக்கில் தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திருச்சி லால்குடி இடையாற்றுமங்கலத்தில் நாராயணஅய்யர் என்பவருக்கு சொந்தமாக காலி நிலம் இருந்தது. அந்த நிலத்தை 2 பேர் விலைக்கு வாங்கி வைத்திருந்தனர். அதில் 0.92 சென்ட் நிலத்தை கடந்த 1973-ம் ஆண்டு குந்தாளத்தம்மாள் (வயது 84) என்பவருக்கு விற்றுள்ளனர். இந்தநிலையில் திருச்சி கூகூரை சேர்ந்த சிவாஜி அந்த நிலத்தை அபகரிக்கும் நோக்குடன், நாராயணஅய்யரின் மகனான வெங்கட்ராமஅய்யரின் 4 மகன்கள் போல, போலியான நபர்களை வைத்து ஆள்மாறாட்டம் செய்து, போலி பட்டா பெற்றுள்ளார். அந்த பட்டாவை வைத்து 2017-ம் ஆண்டு ரூ.15 லட்சம் மதிப்பு நிலத்தை தனது நண்பரான தொழில்அதிபர் ராஜாவுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து குந்தாளத்தம்மாள் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி சிவாஜி, ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சிவாஜியை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த லால்குடியை சேர்ந்த தொழிலதிபர் ராஜாவை (44) நேற்று கைது செய்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்