மாவட்ட செய்திகள்

சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 30 பவுன் நகையுடன் பயணியின் கைப்பை மாயம்

சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 30 பவுன் நகையுடன் பயணியின் கைப்பை மாயமானது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் நூர்தீன் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இந்த நிலையில் கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று முன்தினம் சேரன் ரெயிலில் நூர்தீன் குடும்பத்தினருடன் சென்னைக்கு வந்தார்.

சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்ததும், தனது குடும்பத்தினருடன் இறங்கி வீட்டுக்கு சென்றார். அப்போது தான் தனது மனைவியின் கைப்பையை ரெயிலில் மறந்து விட்டு வந்தது நூர்தீனுக்கு தெரியவந்தது. இதையடுத்து சென்டிரல் ரெயில் நிலையம் சென்று சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தான் பயணம் செய்த பெட்டி முழுவதும் தேடிப்பார்த்தார். ஆனால் கைப்பை கிடைக்கவில்லை

இதையடுத்து நூர்தீன், சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் தனது மனைவி கைப்பையை மறந்து விட்டு சென்றதாகவும், அதில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் நகை இருந்ததும், இப்போது அந்த கைப்பையை காணவில்லை என்றும் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்