மாவட்ட செய்திகள்

கோர்ட்டு உத்தரவு எதிரொலி: கறம்பக்குடி ரேஷன் கடை முன்பு திரண்ட பொதுமக்கள் தள்ளு, முள்ளு-பதற்றம்

பொங்கல் பரிசு தொகுப்புக்கு தடைவிதித்து கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து கறம்பக்குடி ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் திரண்டதால் தள்ளு, முள்ளு ஏற்பட்டு பதற்றம் நிலவியது.

தினத்தந்தி

கறம்பக்குடி,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக உணவு பொருள் வழங்கல் துறை சார்பில், விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. கூட்ட நெரிசலை தவிர்க்க பகுதி வாரியாக அந்தந்த ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்பு வழங்கப் படும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

இதன்படி கறம்பக்குடி தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. இதனால் ரேஷன் கடைகள் முன்பு ஏற்கனவே அறிவித்திருந்த படி குடும்ப அட்டைதாரர்கள் பரிசு தொகுப்பை வாங்கி சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கு கோர்ட்டு தடை விதித்த தகவல் பரவியது. இதனால் பரிசு தொகுப்பையும், ரூ.ஆயிரத்தையும் வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கறம்பக் குடியில் உள்ள ரேஷன் கடை முன்பு குவிந்தனர். இதனால் ஏற்கனவே வரிசையில் நின்றவர்களுக்கும், திடீரென வந்த மக்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ரேஷன் கடைக்கு சென்று கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் அனைவருக்கும் மற்ற நாட்களில் பரிசு தொகுப்பு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் அமைதியாக வரிசையில் நின்றனர். இச்சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்