மாவட்ட செய்திகள்

சொத்துவரியை 3 தவணைகளாக செலுத்த வேண்டும் ஓட்டல் நிர்வாகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஓட்டல் சொத்துவரியை 3 தவணைகளாக செலுத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாஸா ஓட்டல் நிர்வாகம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ.24 கோடியை செலுத்தவில்லை. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் கடந்த மார்ச் 20-ந்தேதி தண்டோரா போட்டு அறிவித்து நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி ஓட்டல் நிர்வாகம், ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஓட்டல் நிர்வாகம் சார்பில் 2 நாட்களில் ரூ.2 கோடி செலுத்துவதாகவும், இம்மாத இறுதிக்குள் ரூ.1 கோடி செலுத்துவதாகவும், மீதி தொகையை செலுத்த கால அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு மாநகராட்சி வக்கீல் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, சொத்துவரி பாக்கியில் ரூ.10 கோடியை ஓட்டல் நிர்வாகம் வருகிற மார்ச் 30-ந்தேதிக்குள் ரூ.3 கோடியும், ஏப்ரல் 30-ந்தேதிக்குள் ரூ.3.50 கோடியும், மே 30-ந்தேதிக்குள் ரூ.3.50 கோடியும் என 3 தவணைகளில் செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.14 கோடியை செலுத்துவது தொடர்பாக கீழ்கோர்ட்டில் நடைபெறும் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்