மாவட்ட செய்திகள்

பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் - திருத்துறைப்பூண்டியில் நடந்தது

பயிர்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி திருத்துறைப்பூண்டியில் விவசாயிகள் திருயோடு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயிகள் சங்கத்தினர் 2018-2019-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், நடப்பாண்டு சம்பா சாகுபடிக்கான விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களை அரசு கூட்டுறவு சங்கங்களின் மூலம் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியங்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருவோடு ஏந்தி பட்டை நாமம் போட்டு கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலியபெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், சங்கத்தின் ஒன்றிய செயலாளர் மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபால கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 2018-2019-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். நகர தலைவர் பன்னீர்செல்வம், நகர துணை செயலாளர் தமிழ்மணி, மாவட்ட பொருளாளர் சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், நகர செயலாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகரகுழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கர், வக்கீல் செந்தில்குமார், பசுபதி, ரவீந்திரன், கார்த்தி, ராஜேஷ், செல்வம், வீரசேகரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்