மாவட்ட செய்திகள்

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: பால்குடம், பறவைக்காவடி, அலகுகுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் இன்று தேரோட்டம் நடக்கிறது

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், பறவைக் காவடி எடுத்தும் அலகுகுத்தி, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இன்று தேரோட்டம் நடக்கிறது.

தினத்தந்தி

அன்னவாசல்:

முத்துமாரியம்மன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா பூச்சொரிதல், கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த மாதம் 22-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 3-ந் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அம்மன் வீதிஉலா நடைபெற்று வருகிறது. தினமும் மண்டகப்படி நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கீரனூர், நார்த்தாமலை, அன்னவாசல் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கடந்த சில நாட்களாக விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து இன்று காலை முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பறவைக் காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதேபோல கரும்பால் தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

இன்று தோராட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர். கோவிலுக்கு சென்றுவர வசதியாக புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல் பகுதிகளில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் உத்தரவின் பேரில் கீரனூர் போலீசார் செய்து வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்