மாவட்ட செய்திகள்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் அன்பில்மகே‌‌ஷ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் அன்பில்மகே‌‌ஷ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

தினத்தந்தி

திருவெறும்பூர்,

திருவெறும்பூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதியான திருச்சி மாநகராட்சி 27-வது வார்டில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருவெறும்பூர் தொகுதி வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் அன்பில்மகேஷ் பொய்யா

மொழியை வரவேற்றனர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீதி வீதியாக நடந்து சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கூறி வாக்கு சேகரித்தார்.

அப்போது பொன்மலை பகுதி கழக செயலாளர் இ.எம்.தர்மராஜ், வட்ட செயலாளர்கள் ரெங்கநாதன், வாழைக்காய் மண்டி சண்முகம் உட்பட கழக நிர்வாகிகளும், கூட்டணிக் கட்சியை சார்ந்த கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்