மாவட்ட செய்திகள்

ஆசைக்கு இணங்க மறுத்ததால் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் 2 பேர் கைது

ஆசைக்கு இணங்க மறுத்ததால் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

தினத்தந்தி

கடலூர்

புகார்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த கணவனை இழந்த 31 வயதான பெண், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், செங்கல் சூளையில் இருந்து டிராக்டர் மூலம் செங்கல் ஏற்றி, இறக்கும் கூலி வேலை செய்து வரும் நான், 2 பெண் குழந்தைகளுடன் எனது மாமியார் வீட்டில் வசித்து வருகிறேன்.

கடந்த 8.8.2021 அன்று அங்குச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, நீ ஒரு ஆண் நபருடன் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாசமான படங்கள் எனது வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்துள்ளதாக கூறி, அதனை எனது வாட்ஸ்-அப்க்கு அனுப்பி வைத்தார்.

ஆபாசமாக சித்தரித்த படம்

அதேபோல் எனது வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் வாலிபருடன் நான் இருப்பது போன்ற புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து, அந்த வாலிபரின் தந்தையின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு படங்கள் அனுப்பி வைத்துள்ளனர். அதனால் எனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (சைபர் கிரைம்) இளங்கோவன் மேற்பார்வையில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் பண்ருட்டி அடுத்த கே.குச்சிப்பாளையத்தை சேர்ந்த கோவிந்தராசு மகன் தங்கதுரை (வயது 44) என்பவர், அந்த பெண்ணை தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், அந்த பெண்ணை மானபங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பெண்ணின் புகைபடத்தையும், அவரது எதிர் வீட்டில் வசிக்கும் வாலிபரின் புகைப்படத்தையும் கண்டரக்கோட்டையை சேர்ந்த தேவநாதன் மகன் எழிலரசன் (21) உதவியுடன் ஆபாசமாக சித்தரித்து, வாட்ஸ்-அப்பில் அனுப்பி அந்த பெண்ணை மிரட்டியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கதுரை, எழிலரசன் ஆகியோரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்