மாவட்ட செய்திகள்

இன்பெக்டர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் போலீஸ் கமிஷனா பரம்பீர் சிங் மீது வழக்குப்பதிவு

இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் போல் முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

இன்ஸ்பெக்டர் புகார்

அகோலா போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பீம்ராவ் கட்கே. இவர் தானே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 2015 முதல் 2018-ம் ஆண்டு வரை பணியாற்றி உள்ளார். அந்த நேரத்தில் உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் மீது சமீபத்தில் ரூ.100 கோடி ஊழல் புகார் கூறிய முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனா பரம்பிர் சிங் தானேயில் பணியாற்றி உள்ளார்.இதில் பரம்பீர் சிங் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் அதிகாரிகள் மீது பீம்ராவ் கட்கே அகோலா போலீசில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.

அந்த புகாரில், பரம்பீர் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். மேலும் மிகப்பெரிய அளவிலான மோசடி வழக்கு ஒன்றில் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது என பரம்பீர் சிங் கட்டாயப்படுத்தியதாகவும், இதேபோல வழக்குப்பதிவு செய்த சிலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடாது என அவர் மிரட்டியதாகவும் பீம்ராவ் கட்கே புகாரில் கூறியிருந்தார்.

இன்ஸ்பெக்டரின் புகார் குறித்து அகோலா போலீசார் பரம்பீர் சிங், உதவி போலீஸ் கமிஷனர் பரக் மனிரே மற்றும் 26 போலீசார் மீது வன்கொடுமை, தடயங்களை அழித்தல், சதித்திட்டத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்