திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராணுவத்தில் சேர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக இலவச உடற்கூறு பயிற்சி வருகிற 2ந் தேதி (திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 10ந் தேதி வரை அளிக்கப்பட உள்ளது.
எனவே ராணுவத்தில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் அணுகி பயிற்சிக்கான விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.