மாவட்ட செய்திகள்

வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் நடைமுறை தொடரும் - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வர இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

தினத்தந்தி

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் 2 யூனிட்டுகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி ரூ.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 2 யூனிட்டுகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரியில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் கூட்டம் கூடக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நீலகிரியில் சுற்றுலா தலங்கள் திறப்பது குறித்து அரசிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் பின்னர் தெரிவிக்கப்படும். மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஆனால், கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வருகிறவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற்று வந்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்