மாவட்ட செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ஜிகா வைரஸ் காய்ச்சலுக்கான பரிசோதனை முகாம்

திருச்சி விமான நிலையத்தில் ஜிகா வைரஸ் காய்ச்சலுக்கான பரிசோதனை முகாம்

தினத்தந்தி

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. அந்த விமானங்களில் பல்வேறு நாடுகளில் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் யாருக்காவது ஜிகா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் தெரிவித்து, சிகிச்சை பெறலாம் என்ற அறிவிப்பு பலகை டிஜிட்டல் முறையில் சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஜிகா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களிலேயே முதன் முறையாக திருச்சி விமான நிலையத்தில் ஜிகா வைரஸ் பரிசோதனை முகாம் நேற்று முதல் நடத்தப்படுகிறது.

தமிழக அரசின் சுகாதாரத் துறை மற்றும் விமான நிலைய மருத்துவக் குழு இணைந்து நடத்தும் இந்த முகாமை விமான நிலைய இயக்குனர் குணசேகரன், துணை பொது மேலாளர் ஜெயவர்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் விமான நிலைய மருத்துவ அதிகாரி மண்டல், டாக்டர் சரண்யா, தமிழக அரசு டாக்டர் செல்வி, மருத்துவ அலுவலர் ஆரோக்கியமேரி உள்ளிட்டோர் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில், விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முக்கியமாக வெளிநாட்டில் இருந்து வரும் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. ஏதேனும் பயணிக்கு ஜிகா வைரஸ் காய்ச்சலுக்கான தாக்கம் தென்பட்டால் அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சென்னை மற்றும் புனேவில் உள்ள மருத்துவ பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு மட்டுமே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த பரிசோதனை முகாம் நடத்தப்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்