மாவட்ட செய்திகள்

கை, கால்களை கட்டி தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை

கை, கால்களை கட்டி, தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த பெரிய கொளுத்துவான்சேரியில் புதர்மண்டி கிடந்த காலி இடத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மாங்காடு போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.

அங்கு வாலிபர் ஒருவர், தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது 2 கைகளும் பின்னால் கட்டப்பட்டு இருந்ததுடன், கால்களும் கட்டப்பட்டு இருந்தது. பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசூரியா (வயது 20) என்பதும், இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த வினோத், லோகேஷ் ஆகியோர் போரூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வினோத், தனது தம்பியின் கொலைக்கு பழி வாங்கும் விதமாக ஜெயசூரியாவை கொலை செய்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கடந்த ஆண்டு வழிப்பறி செய்த செல்போன்களை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் ராகேஷ் என்பவரை வசந்தகுமார் என்பவர் கொலை செய்தார். இந்த வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று விட்டு வெளியே வந்த வசந்தகுமாரை, ராகேசின் நண்பர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கொலை செய்தனர்.

இதில் ஜெயசூர்யா முக்கிய பங்கு வகித்துள்ளதும், தனது தம்பி வசந்தகுமாரியின் சாவுக்கு பழி தீர்க்க வினோத் காத்திருந்தார். அதன்படி ஜாமீனில் வெளியே வந்த ஜெயசூரியாவை அவரது கை, கால்களை கட்டிப்போட்டு தலையில் கல்லைப்போட்டு வினோத் கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

வசந்தகுமார் கொலை செய்யப்பட்ட அதே மாதம் ஆகஸ்டு மாதத்தில் தம்பி கொலைக்கு பழிக்குப்பழியாக ஜெயசூர்யாவை கொன்றதும் தெரிந்தது. இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்