மாவட்ட செய்திகள்

அரிச்சந்திரா, அடைப்பாறில் இருந்து உவர்நீர் இறால் வளர்ப்புக்கு தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை

அரிச்சந்திரா, அடைப்பாறு ஆகிய ஆறுகளில் இருந்து உவர் நீர் இறால் வளர்ப்புக்கு தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டத்தில் உள்ள அரிச்சந்திரா ஆற்றில் தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் வேதாரண்யம் வட்டம் அடைப்பாறு ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் நீர் நன்னீராக உள்ளதால் தடுப்பணைக்கு மேல் உள்ள பகுதிகளில் உவர்நீர் இறால் வளர்ப்பு செய்ய கூடாது. மேலும் இப்பகுதியில் உவர் நீர் இறால் வளர்ப்பு குளங்களில் உள்ள தண்ணீரை திறந்து விட கூடாது.

அரிச்சந்திரா ஆறு மற்றும் அடைப்பாறு ஆகியவற்றில் இருந்து இறால் வளர்க்கும் குளத்திற்கு தண்ணீர் எக்காரணம் கொண்டும் எடுக்க கூடாது. இதை மீறினால் பண்ணைகளின் மீது மீன்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே மீன்வளத்துறையின் அனுமதியுடன் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு இல்லாத நன்னீர் இறால் வளர்ப்பினை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்