மாவட்ட செய்திகள்

மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி : ரமேஷ் ஜார்கிகோளி, ராமலிங்கரெட்டியிடம் பேசுவேன் - குமாரசாமி பேட்டி

முதல்-மந்திரி குமாரசாமி பாகல்கோட்டை மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தினத்தந்தி

பெங்களூரு,

எனக்கு எதிராக சித்தராமையா வியூகம் வகுத்துள்ளதாக நீங்கள் சொல்கிறீர்கள். வியூகம் வகுப்பது என்பது மனிதனின் சகஜ குணம். இதுபற்றி நான் எதற்காக பேச வேண்டும்?. மேலே ஒருவன்(கடவுள்) இருக்கிறான். அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறான். ரமேஷ் ஜார்கிகோளி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கூறி இருக்கிறார். அரசியலில் தங்களின் நோக்கம் நிறைவேறாதபோது, சமீபகாலமாக இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டன.அவரிடம் இதுபற்றி பேசுவேன். காங்கிரசில் எழுந்துள்ள அதிருப்தியை அக்கட்சியின் தலைவர்களே சரிசெய்வார்கள். ரமேஷ் ஜார்கிகோளி, ராமலிங்கரெட்டி உள்ளிட்டோர் எனக்கும் நண்பர்கள். அதனால் தனிப்பட்ட முறையில் அவர்களிடம் நான் பேசுவேன். அடுத்த மாதம் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்டி விவாதிப்பேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்