மாவட்ட செய்திகள்

வேதராண்யம் தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மோட்டார் சைக்கிளில் வீதி, வீதியாக சென்று பிரசாரம்; சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு என உறுதி

வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மோட்டார் சைக்கிளில் வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்தார். அப்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு என உறுதி அளித்தார்.

தினத்தந்தி

ஓ.எஸ்.மணியன் பிரசாரம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செம்போடை, கத்தரிப்புலம், பிராந்தியங்கரை, மூலக்கரை, கரியாப்பட்டினம், செண்பகராயநல்லூர், செட்டிபுலம், மருதூர் வடக்கு, தென்னம்புலம், கத்தரிப்புலம், நாகக்குடையான் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பல்வேறு கிராமங்களில் ஓ.எஸ்.மணியன், மோட்டார் சைக்கிளில் வீதி, வீதியாக சென்று இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார்.

மணமக்களுக்கு வாழ்த்து

பிராந்தியங்கரையில் புதுமண தம்பதி வீட்டுக்கு சென்ற அமைச்சர், மணமக்களை வாழ்த்தி, அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போது அமைச்சர் பேசியதாவது:- வேதாரண்யம் ஒன்றியத்துக்கு கொள்ளிடம் தண்ணீர் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களை கடந்து வருகிறது. குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டால் 2 அல்லது 3 நாட்கள் தண்ணீர் கிடைக்காது. இந்த சூழ்நிலையில் நாகக்குடையான், தாணிக்கோட்டகம் ஆகிய இடங்களில் ஏரிகள் தூர்வாரப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த ஏரிகளின் நீர் ஆதாரத்தை பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் உள்ளூர் நீராதாரத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

துண்டு பிரசுரங்கள்

வேதாரண்யம் நகராட்சி பகுதியில் 10-வது வார்டில் அ.தி.மு.க. வார்டு செயலாளர் கண்ணன் தலைமையிலும், தோப்புத்துறையில் நகர மன்ற முன்னாள் துணைத்தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட், தொப்பி அணிந்து வீடு, வீடாக சென்று சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரம் செய்தனர். பிரசாரத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிரிதரன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் சுப்பையன், துணை செயலாளர் வீரமணி, மாவட்ட கவுன்சிலர் திலீபன், நகர செயலாளர் நமச்சிவாயம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அறிவழகன், கோடியக்கரை ஜின்னா அலி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன், மதியழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகி பிரின்ஸ், கோபால்ராஜா, அ.தி.மு.க. நிர்வாகிகள் இளங்கோவன், தென்னம்புலம் சேட், பா.ம.க. மாவட்ட தலைவர் ராஜசிம்மன் மற்றும் பா.ஜனதா உள்ளிட்ட

கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்