மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் ஒன்றியத்தில் ஏரியில் குடிமராமத்து பணிகள் - அமைச்சர் நிலோபர் கபில் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் ஒன்றியத்தில், ஏரியில் குடிமராமத்து பணிகளை அமைச்சர் நிலோபர் கபில் தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் ஒன்றியம், குரிசிலாப்பட்டு பாப்பானூர் ஏரியில் ரூ.5 லட்சம் செலவில் முட்புதர்கள், கருவேலமரங்களை அகற்றும் குடிமராமத்து பணி தொடக்க விழா நடைபெற்றது. திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நலங்கில்லி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.முருகேசன் வரவேற்றார். பொக்லைன் எந்திரம் மூலம் முட்புதர்களை அகற்றும் பணியை அமைச்சர் நிலோபர் கபில் தொடங்கி வைத்தார்.

விழாவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சி.செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ருக்குமணி மகேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் கவிதா ஆசைதம்பி, கூட்டுறவு சங்க தலைவர் ஜெயபால் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.

இதேபோல், பல்லவள்ளி, இருணாப்பட்டு கிராமத்தில் உள்ள குட்டைகளை தூர்வாரும் பணிகளை அமைச்சர் நிலோபர் கபில் தொடங்கி வைத்தார்.

ஜொல்லகவுண்டனூரில் தரை கிணறு பகுதியில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் நிலோபர் கபில் கிணறு பகுதியை பார்வையிட்டார். பின்னர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கி தருவதாகவும், பணிகளை தொடங்கவும் உத்தரவிட்டார்.

பின்னர் அமைச்சர் நிலோபர் கபில் நிருபர்களிடம் கூறுகையில், திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆண்டியப்பனூர், பூங்குளம், மரிமாணிகுப்பம், பெருமாபட்டு ஆகிய 4 ஏரிகளிலும் தலா ரூ.5 லட்சம் செலவில் குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ளது என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்