மாவட்ட செய்திகள்

இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் விவசாயம் சார்ந்த படிப்புகளுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் விவசாயம் சார்ந்த படிப்புகளுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது என மண்டல இயக்குனர் கூறினார்.

தினத்தந்தி

திருச்சி,

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த 25 படிப்பு மையங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். தொலை தூர கல்வியை நவீன மயாக்குதல், வேலைவாய்ப்புக்கேற்ற கல்வி போதித்தல், படிப்பு மையங்களின் குறைபாடுகளை நீக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிவில் மதுரை மண்டல முதுநிலை இயக்குனர் சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை உயர் கல்வி அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் அதனை முழுமையாக செயல்படுத்தி வருகிறது. போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளுதல், நவீன தொழில் நுட்ப திறனுடன் வேலை வாய்ப்புகள் பெறுவதற்கான கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.


உயர்கல்வியில் மின்னாளுமையின் பயன்பாடு சமுதாயத்தின் கீழ்நிலையில் உள்ள சாதாரண மக்களையும் சென்றடையும் வகையில் கல்வி திட்ட முறைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. எமது பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 75 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், கிராமப்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக விவசாயம் சார்ந்த படிப்புகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் கல்வி பயிற்றுவிக்கும் வசதியும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்