மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கிருஷ்ணகிரி தாசில்தார் சேகர், சூளகிரி தாசில்தாராகவும், சூளகிரி தாசில்தார் மிருணாளினி கிருஷ்ணகிரி தாசில்தாராகவும், தேன்கனிக்கோட்டை தாசில்தார் வெங்கடேசன், பர்கூர் தாசில்தாராகவும், பர்கூர் தாசில்தார் மதுசெழியன், கிருஷ்ணகிரி டாஸ்மாக் ஆய மேற்பார்வை அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல கிருஷ்ணகிரி டாஸ்மாக் ஆய மேற்பார்வை அலுவலர் ஜெயசங்கர், ஊத்தங்கரை தாசில்தாராகவும், ஊத்தங்கரை தாசில்தார் மாரிமுத்து, ஓசூர் அலுவலகத்தில் தனி தாசில்தாராகவும் (நில எடுப்பு), சிப்காட் பகுதி-3, அலகு -3 ஆகவும், அங்கு பணிபுரிந்த ராமச்சந்திரன் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகததில் தேர்தல் பிரிவு தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

தேர்தல் தாசில்தார் தணிகாசலம், கிருஷ்ணகிரி டாஸ்மாக் அலுவலக கிடங்கு மேலாளராகவும், டாஸ்மாக் கிடங்கு மேலாளர் முனுசாமி, அஞ்செட்டி தாசில்தாராகவும், அஞ்செட்டி தாசில்தார் பாலசுந்தரம், ஓசூர் தாசில்தாராகவும், ஓசூர் தாசில்தார் முத்துப்பாண்டி, தேன்கனிக்கோட்டை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணியிட மாற்றத்திற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்