மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; டிரைவர் சாவு

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சேந்தமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை. இவரது மகன் அல்போன்ஸ் (வயது 34). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அல்போன்ஸ் வழக்கம் போல வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவர் திருவள்ளூரை அடுத்த தொடுகாடு சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதை கண்ட டிரைவர் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டார். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்போன்ஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பி ஓடிய கார் டிரைவர் யார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்