மாவட்ட செய்திகள்

ராமநத்தம் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

ராமநத்தம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே உள்ள எம்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் மணிகண்டன்(வயது 21). இவர் நேற்றுமுன்தினம் தனது நண்பர் ஆறுமுகம் மகன் அன்பழகன்(24) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் மங்களூரில் இருந்து ஆவட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். ம.பொடையூர் சோழபுரம் என்ற இடத்தில் சென்ற போது எதிரே ஆவட்டியில் இருந்து மங்களூர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

இதில் மணிகண்டன், அன்பழகன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கொடிக்களத்தை சேர்ந்த குணசேகர் மகன் அருண்ராஜ்(25) ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மணிகண்டன் மட்டும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அன்பழகன், அருண்ராஜ் ஆகியோர் பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு